யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மத்தி, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நாட்கள் 31 கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள்!
நேற்றுப் போல் எல்லாம் எம்
நெஞ்சோடு நினைவிருக்க
காற்றுப் போல் கண்களுக்கு
தோன்றாமல் நிற்கின்றீர்தோற்றுப் போனது எம்
எதிர்பார்ப்பு எல்லாம் தான்எம்மோடு இயந்திரமாய் இயங்கிய
இனிய ஜீவன் அவர் இன்று எம்மோடு
இல்லைஆயிரமாயிரம் வினாக்கள்
விடைசொல்ல ஒரு நிமிடம் வாரீரோ?
விளையாட்டாகினும் கூட
சில மணித்துளிகள்
விழி அசைக்க மாட்டீரோ?
காலங்கள் பல சென்றாலும்
கடைசி வரை உங்கள் நினைவு
எம் நெஞ்சை விட்டு அகலாது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அமரர் சின்னத்துரை விநாயகமூர்த்தி(வைத்திலிங்கம்) அவர்களின் சிவபதப்பேறு குறித்த அந்தியேட்டி கிரியைகள் 17-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 19-09-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்திலும் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
மடத்தடி வீதி, நீர்வேலி மத்தி,
நீர்வேலி.
இங்ஙனம்,
குடும்பத்தினர்