1ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் இராயப்பு வேதநாயகம்
அமரர் இராயப்பு வேதநாயகம்
வயது 84
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்) Toronto, Canada
தோற்றம் 25 FEB 1939***மறைவு 28 JUN 2023

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேதநாயகம் இராயப்பு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

வாழ்ந்தாலும் இறந்தாலும்,
நாம் ஆண்டவருக்கே உரியவர்கள்- ரேமார் 14:08

என்னவரே எனை விட்டுப் பிரிந்து
ஆண்டு ஒன்று ஆனதோ?
நித்தமும் உம் நினைவால் வாடுகின்றேன் உம் மனைவி இங்கு....
கரம் பிடித்தல் நாள்முதல் இன்றுவரை
என்றும் உம் நினைவுதான்...

உம் மலர் முகம் கண்டே உள்ளம் மகிழ்ந்தோம் - அப்பா
உம் மடியில் நாம் வாழ்ந்ததை மறவோம் - அப்பா
பாசம் ஒன்றையே பண்பாய் பொழிந்தோம்- அப்பா
குழந்தைகளாய் நாம் இருந்த போது
குடும்ப சுமை உம்மை உலுக்கிய வேளைகளில்
அன்பாக அரவணைத்து நகைச்சுவை கதை பேசி
எம் சிரிப்பில் நீங்கள் மகிழ்ந்தீர்கள் - அப்பா
குறைதெரியாது நிறைவாக நாம் வாழ
குன்றின் தீபமாய் எமக்காய் ஒளிர்ந்தீரே - அப்பா
ஏணியாய் இருந்து எம்மை எல்லாம் உயர்த்தினீர்கள் - அப்பா
வாழ்த்திட, நீங்கள் அருகில் இல்லையே - அப்பா
உங்கள் பேரப்பிள்ளைகளின் குறும்பு செயல்களை -இரசித்து
சிரித்து மகிழ்ந்தீர்கள் - அப்பா

வான் வீட்டில் இன்புற்றிருக்க
இறைவனை வேண்டுகிறோம்.

உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள்.

தகவல்: குடும்பத்தினர்

Posted on 30 Jun 2024 by Neervely Admin1
Content Management Powered by CuteNews