1ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் தம்பையா தர்மலிங்கம்
திரு தம்பையா தர்மலிங்கம்
லக்‌ஷ்மி நாராயணா லொறி உரிமையாளர்
இறப்பு - 07 JUN 2023
நீர்வேலி வடக்கு, Sri Lanka (பிறந்த இடம்) நீர்வேலி மேற்கு, Sri Lanka

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பையா தர்மலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புள்ள அப்பாவே!
எங்களை தவிக்க விட்டு விட்டு
எங்கே சென்றீர்கள் அப்பா!

அன்பையும் பண்பையும் காட்டி வளர்த்தீர்களே!
உங்கள் நினைவுகளை மட்டும்
விட்டு விட்டு சென்றுவிட்டீர்களே!

காலம் சென்றாலும்
உங்கள் நினைவுகள் அழியாது அப்பா!
என்றென்றும் எங்களின் இதயத்தில்
இருப்பீர்கள் அப்பா!

உங்களின் பாத அடி தொடர்ந்து செல்வோம்
உங்களின் நினைவுகளோடு... 

உங்கள் ஆத்மா சாந்தியடைய

இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..


அன்னாரின் முதலாம் ஆண்டு நிறைவினை நினைவுகூறும் பொருட்டு எதிர்வரும் 26-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் எமது இல்லத்தில் நிகழும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டுமுகவரி:
மாசிவன் சந்தி,
நீர்வேலி மேற்கு,
நீர்வேலி.

தகவல்: குடும்பத்தினர்

Posted on 23 May 2024 by Neervely Admin1
Content Management Powered by CuteNews