யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை நிலாவெளி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமு சின்னத்துரை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் சிகரமே
வாழ்வின் ஒளிவிளக்கே
எம் குடும்பத்தலைவனே!
எம் வாழ்வின் வழிகாட்டிய தீபமே!
ஆண்டு மூன்று மறைந்து விட்ட போதிலும்
அன்பின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
எம்மோடு பயணித்த எங்கள் அன்புத்தெய்வமே!
நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக நீங்கள் இருந்தீர்கள்!
உங்கள் குரல் எங்கள் காதுகளில்
இப்போதும் கணீரென்று கேட்குதப்பா!
ஆண்டுகள் கடந்தாலும் உங்கள் புன்முறுவல்
பூப்பூத்தவதனமாய் இருந்துகொண்டே இருக்கும்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்: குடும்பத்தினர்