நினைவஞ்சலி: அமரர் இளையதம்பி இரத்தினசிங்கம், அமரர் யோகாமலர் இரத்தினசிங்கம்
அமரர் இளையதம்பி இரத்தினசிங்கம், அமரர் யோகாமலர் இரத்தினசிங்கம்
மறைவு 28 SEP 2021
கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், Sri Lanka (பிறந்த இடம்), நீர்வேலி, Sri Lanka

அமரர் யோகமலர் இரத்தினசிங்கம் (மம்மி): 
பிறப்பு: 31 OCT 1947
இறப்பு: 30 AUG 2012

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த யோகமலர் இரத்தினசிங்கம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் நினைவோடு நினைவாகி
கனவோடு கனவாகி
உணர்வோடு உணர்வாகி
உயிரோடு உயிராக
கலந்த எம் அம்மாவே!

பாசத்தின் சுமையோடு எம்மை
 இங்கே பரிதவிக்கவிட்டு
நீங்கள் மட்டும் நெடுந்தூரம்
சென்றது ஏன்?

அம்மா நம்பவே முடியவில்லையே
நேற்றுப்போல் இருக்குதம்மா
உங்களிடம் நாம் கழித்திட்ட பொழுதுகள்
 ஆணிவேராய் எம்மை காத்து
நின்ற எங்கள் தெய்வமே
விழுதுகள் நாம் விம்முகின்றோம்
ஆண்டுகள் கடந்தாலும் ஆறவில்லை
எம் மனம் விழிகளில் கண்ணீர் காயவில்லை
காலங்கள் கடந்தாலும் மாறாது
என்றென்றும் உங்கள் நினைவலைகள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

----------------------------------------------------------------------------------

அமரர் இளையதம்பி இரத்தினசிங்கம்(பப்பா- ஆச்சாரியார்):
பிறப்பு 28 DEC 1938
இறப்பு 28 SEP 2021

யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி இரத்தினசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டிரண்டு போனாலும்
அழியவில்லை உங்கள் நினைவு
 அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும்
வாழ்ந்த எம் அன்புத் தெய்வமே!
 எங்கள் ஆசை அப்பாவே எங்கு சென்றீர்கள்!

அன்பான எங்கள் அன்பு அப்பா!
இறைவனிடம் நீங்கள் சென்று
ஈராண்டுகள் ஆகியதுவோ...
 உங்களை நினைக்கும் போது
வரும் கண்ணீரை நாங்கள் துடைத்தாளும்
எங்கள் இதயத்தின் வலி நிரந்தரமானது!

உங்களை இழந்து வாழும் எங்கள் வலி
காலத்தாலும் ஆற்றமுடியாதது
 உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Posted on 30 Aug 2023 by Neervely Admin1
Content Management Powered by CuteNews