10ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் ஆறுமுகம் யோசேப்பு (மணியம்)
அமரர் ஆறுமுகம் யோசேப்பு (மணியம்)
வயது 73
வயாவிளான், Sri Lanka (பிறந்த இடம்) நீர்வேலி, Sri Lanka, Stains, France
தோற்றம் 05 JUL 1939 *** மறைவு 16 APR 2013

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி பரலோக மாதா கோவிலடியை வதிவிடமாகவும், 7 Rue Marthe, 93240 Stains, France எனும் முகவரியை வதிவிடமாகக் கொண்டிருந்த ஆறுமுகம் யோசேப்பு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு பத்து ஆனாலும்
 ஆற முடியவில்லை எம்மால்
 இப்பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
 ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்...

அன்பான அப்பா உங்கள் முகம் காண
ஏங்கித் துடிக்கின்றோம் எங்களை வழிநடத்தி
 அறிவூட்டவேண்டிய நீங்கள் பாதியில்
விட்டுச் சென்றதேன்!

நீங்கள் மறைந்து போன பின்பும்
 உங்கள் நினைவுகளை சுமந்த உறவுகளின்
 நெஞ்சமெல்லாம் கண்ணீரால் நனைந்து
போகின்றதய்யா!

இன்றுடன் 10ஆண்டுகள் ஓடி
 மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: Father Francis- Srilanka

Posted on 19 Apr 2023 by Neervely Admin1
Content Management Powered by CuteNews