1ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் கமலராஜ் தர்மராசா
அமரர் கமலராஜ் தர்மராசா
வயது 48
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்) Aarau, Switzerland
தோற்றம் 04 JAN 1974 *** மறைவு 13 APR 2022

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aarau ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கமலராஜ் தர்மராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனாலும்
 ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
 ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்!

 குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குலவிளக்கே!

 உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம் நிரந்தரமாய் விரைந்தீரோ?
 ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
 உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!

 இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Posted on 04 Apr 2023 by Neervely Admin1
Content Management Powered by CuteNews