45ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்: திரு ஜெயராசா றொமேஸ்
திரு ஜெயராசா றொமேஸ்
வயது 35
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்) Castrop-Rauxel, Germany
பிறப்பு 08 SEP 1986***இறப்பு 11 APR 2022

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop Rauxel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயராசா றொமேஸ் அவர்களின் 45ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

நீ வளமோடு வாழ்வாய் என வாஞ்சையுடன்
நாங்கள் கண்ட கனவு ஏராளம்...!

கண் மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதினில் நடந்தவைகள் நிஜம் தானா
என்று நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?

உன் சிரிப்பை நாம் ரசித்த போதெல்லாம்
தெரியவில்லை எம் மொத்தச் சிரிப்பையும்
நீ எடுத்துச் செல்வாய் என்று!

நான் பார்க்கும் திசையெல்லாம்
உன் உருவே தெரியுதப்பா !!
நிஜத்திலே வந்துவிட்டால்
நிம்மதியாய் நாம் இருப்போம்
வாராது சென்றதனால்
தீராது சோகமப்பா!!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 28-05-2022 சனிக்கிழமை அன்று மதியம் 01:00 மணியளவில் ClemensstraBe 60. Rauxel 44579, Germany எனும் முகவரியில் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

முகவரி:
Ringstr. 05
Castrop-Rauxel
Germany.

இங்ஙனம்,
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கனூஜன் - மருமகன்
Mobile : +491629684911

Posted on 27 May 2022 by Neervely Admin1
Content Management Powered by CuteNews