1ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை
அமரர் சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை
இளைப்பாறிய இ.போ.ச. சிரேஸ்ட சாலை பரிசோதகர் - பருத்தித்துறை, மன்னார், யாழ்ப்பாணம், நீர்வேலி தெற்கு ஸ்ரீசுப்பிரமணிய சனசமூகத்தலைவர்
வயது 76
யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna, Sri Lanka (பிறந்த இடம்)
பிறப்பு 17 JUN 1944***இறப்பு 02 APR 2021

யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கந்தசுவாமி கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள்!
 கண்ணின் மணிபோல் எம்மைக்
காத்த அன்புத்தெய்வமே
 ஆறிடுமோ எங்கள் துயரம்
 நீங்கள் பிரிந்து ஒரு வருடம்
ஓடிப் போனது இன்னமும் நம்பவே
முடியாமல் நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.

எம்மை எல்லாம் அன்பால்
அரவணைத்து பண்பால்
வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம்
சென்றாலும் மறையாது.

ஒருபோதும் உங்கள் கொள்கை
 நம்வாழ்வில் என்றும் மறையாது.
 உங்கள் நினைவுகள் எம்
மனதை விட்டு நீங்காது.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Posted on 02 Apr 2022 by Neervely Admin1
Content Management Powered by CuteNews