மரண அறிவித்தல்: திரு சிறிஸ்கந்தராசா கஷமுகன்
திரு சிறிஸ்கந்தராசா கஷமுகன் 
பிறப்பு 19 AUG 1979***இறப்பு 31 JAN 2022

புத்தூரைப் பிறப்பிடமாகவும் நீர்வேலி மேற்கு. இராஐவீதி. இராமபுரியை வதிவிடமாகவும் கொண்ட சிறிஸ்கந்தராசா கஷமுகன் நேற்று (31.01.2022) திங்கட் கிழமை இறைவனடி சேர்ந்தார். 

அன்னார் காலஞ்சென்ற சிறிஸ்கந்தராசா மற்றும் சிவனேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் தில்லையம்மா தம்பதியரின் அன்பு மருமகனும். காலஞ்சென்ற கந்தஜோதியின் அன்புக் கணவரும். மதுஷன் (யாழ்ப்பணம் இந்துக் கல்லூரி உயர்தரம் - 2020), சாருகா (இந்து மகளிர் கல்லூரி - தரம் - 10) இந்துஷன் (யாழ்.கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் - தரம் - 08) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற சி.கஐறூபனின் அன்புச் சகோதரரும், இராமசோதி, சிவகுமார், சிவரஞ்சன் ஆகியோரின் அத்தானும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (01.02.2022) செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் தகனக்கிரியைக்காக நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

இராமபுரி, இராஐவீதி, 
நீர்வேலி மேற்கு, 
நீர்வேலி.

தகவல்: குடும்பத்தினர்
076 366 7710
077 341 9617
077 645 0729

Posted on 02 Feb 2022 by Neervely Admin1
Content Management Powered by CuteNews