மரண அறிவித்தல்: திரு கதிரித்தம்பி காசிநாதர்
திரு கதிரித்தம்பி காசிநாதர்
வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பொது முகாமையாளர்
வயது 85
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்)
பிறப்பு 11 SEP 1936***இறப்பு 24 JAN 2022

யாழ். நீர்வேலி வடக்கு காமாட்சி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி காசிநாதர் அவர்கள் 24-01-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரித்தம்பி, செல்வரட்ணம் தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற குமாரசுவாமி, தங்கம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,

கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

றமணி, ஸ்ரீகாந்தன்(ஆசிரியர்- கந்தளாய் பேராறு பரமேஸ்வரா மகா வித்தியாலயம்), ஜெயகாந்தன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருள்மொழி(ஆசிரியை- புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி), விஜிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லோகசறோஜா(கனடா) அவர்களின் அன்பு அண்ணாவும்,

செல்லத்துரை(கனடா), காலஞ்சென்ற கனகசுந்தரம், மகேஸ்வரி, குணவதி(ஜேர்மனி), மதிவதனா, இரவிச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிருஷ்ணதாஷன், சிவராஜா(ஜேர்மனி), மோகனதாஷ், புவனேஸ்வரி, சுபேந்திரா ஆகியோரின் அன்புச் சகலனும்,

லஷ்மிதா, லஷ்மிநாத்(சுவிஸ்), பிரவிநாத் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-01-2022 வியாழக்கிழமை அன்று ந.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சீயாக்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இரவிச்சந்திரன் - சகலன்
Mobile : +94777161929 

ஸ்ரீகாந்தன் - மகன்
Mobile : +94770878734 

ஜெயகாந்தன் - மகன்
Mobile : +41793392396

Posted on 26 Jan 2022 by Neervely Admin1
Content Management Powered by CuteNews