யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை நிலாவெளி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமு சின்னத்துரை அவர்களின் நன்றி நவிலல்.
துன்பம் துயரம் தெரியாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
அன்பு பாசம் ஆகியவற்றை மட்டுமே எமக்களித்து
வாழ்வனைத்தையும் வளமோடு வாழ வழிவகை செய்த நீங்கள்
வாடிய எமை வதைத்து வாழ்வே வெறுப்பேற
எமைவிட்டு நெடுந்தூரம் சென்ற நேரத்தில்
உடனிருந்து உதவி புரிந்து,
ஆறுதல் கூறி அனுதாபம் வழங்கி,
நேரில் பங்கெடுத்து பரிவை காட்டிய
நல் உள்ளங்களுக்கு உளங்கனிந்த
நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்