திருமதி தியாகராஜா மங்களேவரி
வயது 72
நீர்வேலி(பிறந்த இடம்)
மண்ணில் 02 NOV 1948 *** விண்ணில் 20 DEC 2020
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா மங்களேஸ்வரி அவர்கள் 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஸ்ரீமான் மாணிக்கவாசகர் ஸ்ரீமதி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னாம்பிகை இரத்தினசபாபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினசபாபதி தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
கணபதிப்பிள்ளை திருவாசகம்(லண்டன்) அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தியாகராசா மற்றும் முத்துக்குமரன்(நீர்வேலி) அவர்களின் அன்புத் தாயாரும்,
முத்துக்குமரன் தர்சிகா அவர்களின் அன்பு மாமியாரும்,
தனுஜா, பிரியங்கா, மயூரேசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: கிருபா
தொடர்புகளுக்கு
முத்துக்குமரன் - மகன்