பிறந்த இடம்: யாழ். நீர்வேலி
வாழ்ந்த இடம்: தமிழீழம் வள்ளிபுனம்
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், தமிழீழம் வள்ளிபுனத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லெப். கேணல் பார்புகழன் என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் உதயதாஸ் அவர்களின் 8ம் ஆண்டு வீர நினைவஞ்சலி.
எம் வாழ்வின் உதயமே நாம்
தேடி எடுத்த பொக்கிஷமே
பார்புகழ வாழ வைத்தாய்
அன்பால் எம்மை அரவணைத்தாய்
காலன் கண் வைத்தானோ
உனை அழைத்துச் சென்றானோ!!!
ஆண்டுகள் எட்டு ஆனதையா எம்
வாழ்வும் இருண்டு போனதையா!!!
ஆறவில்லையே எம் துயரம்
ஆறுதல் சொல்ல யாருமில்லை
பாலன் அவன் பரிதவிக்க
துணைவி அவள் துடிதுடிக்க
எங்கு சென்றாய் எமை விட்டு
கனவுகளை நாம் சுமந்து
கண்களில் நீர் சொரிந்து
கலங்குகின்றோம் உன் நினைவுகளில்
தகவல்
குடும்பத்தினர்