மரண அறிவித்தல்: திரு செல்லத்துரை துரைசிங்கம்மறைவு : 26 டிசெம்பர் 2016

பிறந்த இடம்: யாழ். சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்குயாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை துரைசிங்கம் அவர்கள் 26-12-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சற்குணமணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகந்தன்(சுவிஸ்), சுகந்தி(இலங்கை), ஜெககாந்தி(லண்டன்), யாழினி(இலங்கை), காலஞ்சென்ற அம்பிகைபாலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சரோஜாதேவி, மனோன்மணி, புவிபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சோதிநாதன்(மயூரி இரும்பகம்- நீர்வேலி), மனோகரன், யசோதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற அருந்தவநாதன், சிவகுருநாதன், பத்மாதேவி, கந்தசாமி, காலஞ்சென்ற பாலசுந்தரம், வைரவநாதன், தேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மனோன்மணி, மல்லிகா, காலஞ்சென்ற பத்மநாதன், ஆனந்தராணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

மயூரி, சரவணன், கஸ்தூரி, நதிஸா, ஜொலினா, பிரசாந்த், பிறேம்கா, கௌரிசங்கர், கீர்த்தனா, அபிராமி, அருமைராஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அபினேஷ் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-01-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுகந்தன் - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41762150283
மனோகரன் - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447453365665
ஜசோதரன் - இலங்கை
செல்லிடப்பேசி: +94772165263
சரவணன் - இலங்கை
செல்லிடப்பேசி: +94774641910
செ.புவிபாலசிங்கம் - இலங்கை
செல்லிடப்பேசி: +94779587076

Posted on 31 Dec 2016 by Admin
Content Management Powered by CuteNews