1ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் கந்தையா பாலசுந்தரம் (ஐயா)
பிறந்த இடம்: யாழ். நீர்வேலி தெற்கு
வாழ்ந்த இடம்: யாழ். கோப்பாய் வடக்கு

பிறப்பு : 2 பெப்ரவரி 1945 - இறப்பு : 17 பெப்ரவரி 2015யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பாலசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று கடந்து சென்றாலும்
நீண்டு வரும் நீங்கா நினைவலைகள்
தாண்டிய தடைகள் பல எமைத் தாங்கிய
உங்கள் தோள்கள் வேண்டும் எப்போதுமே
எம்மை வழிகாட்டும் எம் தந்தையாய்!

இப்போது நாம் இந்த இனிய வாழ்க்கை வாழ்வதற்கு
முப்பொழுதும் உங்கள் மூச்சை எமக்கு
முழுமையாய் தந்தீங்களே அப்பா!

முருகன் பாதத்தில் நாளும் நீங்கள் நலமோடு
சேர்ந்திருக்க சிவனோடு உறைவதற்கு
சிவன்ராத்திரியில் எமைவிட்டு சென்றீங்களே!
ஓம் சாந்தி!!!!

எங்கள் தந்தையின் நினைவுப் பிரார்த்தனையும் மதிய போசனமும் 07-03-2016 திங்கட்கிழமை அன்று கோப்பாய் இல்லத்தில் நடைபெறும்.
இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

Posted on 06 Mar 2016 by Admin
Content Management Powered by CuteNews