31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்: திரு இராமமூர்த்தி சந்திரசேகரம் (சந்திரன்)

திரு இராமமூர்த்தி சந்திரசேகரம் (சந்திரன்)
வயது 63
 நீர்வேலி வடக்கு, Sri Lanka (பிறந்த இடம்), இணுவில், Sri Lanka, Glarus, Switzerland 
தோற்றம் 27 NOV 1962***மறைவு 19 MAR 2026


யாழ். நீர்வேலி வடக்கு குறுக்கு வீதியைப் பிறப்பிடமாகவும், இணுவில் மஞ்சத்தடி வீதியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Glarus வதிவிடமாகவும் கொண்ட இராமமூர்த்தி சந்திரசேகரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

விழிமூடி எம்மை வழிகாட்டும் எங்கள் ஒளியான தந்தையே- ஓடி வருவீரோ எம் நல்வாழ்வை காண நேரில் வருவீரோ!

துள்ளித் துள்ளி நாங்கள் போகையில் அள்ளி அணைத்த தங்கமே எம் தந்தையே தள்ளி நின்று எள்ளி நகையாடும் உலகில் துளி கூட துவழாமல் எம்மை தூக்கி விட்ட தந்தையே!

வலியால் நெஞ்சம் தவிக்கையில் ஒளியாய் உம் குரல் கேட்டால் துளியாய் போய்விடும் எம் துயரம்!

அப்பா என்றழைக்க யாருமற்று தவிக்கின்றோம் நீர் மறைந்து 31 நாட்கள் ஆனாலும் உம் நினைவுகள் எம்மை விட்டு அகலாது!!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.  

இங்ஙனம், 
குடும்பத்தினர்

Posted on 17 Apr 2026 by Neervely Admin1
Content Management Powered by CuteNews