யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மத்தி, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு வழிகாட்டி அனைவரையும் அரவணைத்த எங்கள் அன்புத் தெய்வமே!
வீசும் காற்றினிலும் நாம் விடும் மூச்சினிலும் எட்டு திக்குகளிலும் உம் நினைவால் வாடுகிறோம் அப்பா!
உம் இழப்பை ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம் மீண்டும் பிறந்து வருவீரா எம் அன்பு அப்பாவே!
இனி எப்போ எம் முகம் பார்ப்பாய்? உன் புன்முகம் பார்க்க ஏங்கித் தவிக்கின்றோம் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் முதலாம் ஆண்டுத்திதி 08-09-2025 திங்கட்கிழமை அன்று நீர்வேலி மத்தி நீர்வேலியில் அமைந்துள்ள அவரது வீட்டில் நடைபெறும் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்