5ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் முத்தையா ஞானசேகரம்

அமரர் முத்தையா ஞானசேகரம்
உரிமையாளர் - நித்தி லைற்
வயது 60
நீர்வேலி வடக்கு, Sri Lanka (பிறந்த இடம்), பிரான்ஸ், France
பிறப்பு 13 OCT 1959 *** இறப்பு 25 JUN 2020


திதி: 29-06-2025

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்தையா ஞானசேகரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்பின் இருப்பிடமே பாசத்தின்
உறைவிடமே எங்கள் அப்பா
ஆசையாய் இருக்குதப்பா உங்கள்
முகம் பார்க்க வந்திட மாட்டீர்களா? 

உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
ஐந்து வருடம் விரைந்தே போனதப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம்-ஆனாலும்
உங்கள் முகம் பார்க்க துடிக்கும் வேளையில்
நெஞ்சில் இரத்தம் சுண்டுதப்பா 

எத்தனை ஆண்டுகள் சென்றாலும் எம்
நெஞ்சை விட்டு அகலாது உங்கள் நினைவுகள்
இதயதுடிப்பு உள்ளவரை எங்கள்
இதய தீபம் நீங்கள் அப்பா! 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்... 

தகவல்: குடும்பத்தினர்

Posted on 26 Jun 2025 by Neervely Admin1
Content Management Powered by CuteNews