Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திருமதி நிஷாந்தன் சிந்துபிரியா (சிந்து)
திருமதி நிஷாந்தன் சிந்துபிரியா (சிந்து)
அபிவிருத்தி உத்தியோகத்தர் - உடுவில் பிரதேச செயலகம்
வயது 36
யாழ்ப்பாணம், Sri Lanka (பிறந்த இடம்), நீர்வேலி, Sri Lanka
தோற்றம் 08 DEC 1989***மறைவு 30 AUG 2026


இல.83, மானிப்பாய் வீதி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட நிஷாந்தன் சிந்துபிரியா அவர்கள் 30-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், வைத்தியநாதன் நிஷாந்தன் (நிர்வாகி - பாரதி கல்வி நிலையம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

தொசானி (தரம் - 03, யாழ்/இந்து ஆரம்ப பாடசாலை), ஜிவந்திகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சபாரெத்தினம் இராசம்மா மற்றும் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் நாகரத்தினம் ஆகியோரின் பேத்தியும்,

செந்தில்நாதன் (ஓய்வுபெற்ற உத்தியோகத்தர், யாழ் மாநகர சபை) மகேஸ்வரி தம்பதியரின் சிரேஷ்ட புதல்வியும்,

மயூரி (வ/ஸ்ரீ நாகராஜா வித்தியாலயம்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

வைத்தியநாதன் (ஓய்வுநிலை கிராம சேவையாளர்- கோப்பாய் பிரதேச செயலகம்), பாலராணி தம்பதியரின் பாசமிகு மருமகளும்,

நிரோசினி, நிரஞ்சன், தர்சன் ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற செந்தில்ராஜா, செந்தில்வேல் ஆகியோரின் பெறாமகளும்,

தனபாலசரஸ்வதி (ஆயுள்வேத வைத்தியர் - யாழ் மாநகர சபை), காலஞ்சென்ற யோகேஸ்வரி ஆகியோரின் மருமகளும்,

காலஞ்சென்றவர்களான கனகராசா, தங்கராசா, தர்மராசா, சண்முகராசா ஆகியோரின் மருமகளும்,

செல்வராணி அவர்களின் பெறாமகளும்,

சங்கீத் (அபிவிருத்தி உத்தியோகத்தர், கரவெட்டி பிரதேச செயலகம்) அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-09-2026 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது சிறுப்பிட்டி இல்லத்தில் நடைபெற்று, அஞ்சலி நிகழ்விற்காக உடுவில் பிரதேச செயலகத்தில் வைக்கப்பட்டு, பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி: 
சிறுப்பிட்டி வடக்கு, 
நீர்வேலி. 

தகவல்: குடும்பத்தினர் 


தொடர்புகளுக்கு 


Sri Lanka - குடும்பத்தினர் 
Contact Request Details 

சங்கீத் - மைத்துனர் 
Contact Request Details 

மோகன் - மாமா 
Contact Request Details

Posted on 02 Sep 2026 by Neervely Admin1
Content Management Powered by CuteNews