1ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் செல்வராசா சின்னத்தம்பி
அமரர் செல்வராசா சின்னத்தம்பி
இறந்த வயது 89
நீர்வேலி(பிறந்த இடம்)
பிறப்பு 17 JUN 1930 *** இறப்பு 15 MAR 2020

யாழ். நீர்வேலி மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வராசா சின்னத்தம்பி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று ஆனாலும் உங்கள் அன்பு
முகமும் அரவணைப்பும் உங்கள் நினைவலைகளும்
எங்கள் நெஞ்சை விட்டு அகலவில்லை அப்பா!

அன்புக்கு இலக்கணமாயும் பாசத்தின் உறைவிடமாயும் பாரினில் எங்களை எல்லாம் பாசத்துடன் அரவணைத்து வழிநடத்தினீர்கள் அப்பா நீங்கள் எங்களுடன் வாழ்ந்த காலம் கனவாகி போனாலும் உங்கள் நினைவுகள் நிழலாய் தொடருது அப்பா!

ஆண்டுகள் ஆயிரம் சென்றாலும் உங்கள்
நினைவுகள் எங்கள் நெஞ்சை விட்டு அகலாது அப்பா
மறு ஜென்மம் என்று ஒன்று இருந்தால் எங்களுடன்
வந்து விடுங்கள் அப்பா!

எங்களை எல்லாம் விட்டு எங்கு சென்றீர்கள் அப்பா
ஆண்டுகள் பல சென்றாலும் எங்கள் நெஞ்சினில்
என்றும் வாழ்வீர்கள் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! 

தகவல்: குடும்பத்தினர்Posted on 31 Mar 2021 by Neervely Admin1
Content Management Powered by CuteNews