31 ஆம் நாள் நினைவஞ்சலியும் வீட்டுக்கிருத்திய அழைப்பும்: அமரர் இராசையா செல்வநாயகம்

பெயர்: அமரர் இராசையா செல்வநாயகம்
இடம்: நீர்வேலி மேற்கு.
மண்ணுலகம்: 26-09-1947 விண்ணுலகம்: 28-04-2010

கடந்த 28.04.2010 அன்று இறைபதமடைந்த எமது குல விளக்கு இராசையா செல்வநாயகம் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு நேரிலும், தொலைபேசி மூலமும் அனுதாபம் தெரிவித்தவர் களுக்கும் இறுதிச்சடங்குகளில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை இன்று (28.05.2010) வெள்ளிக்கிழமை எமது இல்லத்தில் நடைபெறும். இந்நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
(இதனைத் தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொள்ளவும்)
இவரின் பிரிவால் துயருறும்:
குடும்பத்தினர்.
கரந்தன், நீர்வேலி மேற்கு.
T.P.: 021 3735500

Posted on 06 Jun 2010 by Admin
31ஆம் நாள் நினைவஞ்சலி: அமரர் இரத்தினம் சத்தியகுமார்

பெயர்: அமரர் இரத்தினம் சத்தியகுமார்
இடம்: நீர்வேலி.Posted on 06 Jun 2010 by Admin
31ஆம் நாள் நினைவஞ்சலியும் வீட்டுக்கிருத்திய அழைப்பும்: அமரர் செல்லையா பஞ்சலிங்கம்

அமரர் செல்லையா பஞ்சலிங்கம்
இடம்: நீர்வேலி மேற்கு

மலர்வு 06-08-1929 உதிர்வு 10-04-2010


மாதமொன்று போனதப்பா ஆறவில்லை எம் துயரம்
அவனியில் உன் அரவணைப்பின்றி
அல்லற்படுகின்றோம் அறியாயோ நீ
ஆண்டவன் பாதம் சேர்ந்த உன்
ஆத்மா சாந்திபெறத் தினம் தினம் வேண்டுகின்றோம்
கடந்த 10.04.2010 அன்று சிவபதம் அடைந்த எம் குடும்ப விளக் கின் மரணச் செய்திகேட்டு உடன் இல்லம் வந்து ஆறுதல் தெரிவித் தவர்களுக்கும் மற்றும் பல வழிகளில் உதவி புரிந்தவர்களுக்கும் தொலை பேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் மலர்வளையம் வைத்து அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவிப் பதுடன் இன்று (10.05.2010) திங்கட்கிழமை மு.ப.10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையி லும் அதனைத் தொடர்ந்து நிகழும் மதிய போசனத்திலும் கலந்து கொள் ளும் வண்ணம் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்பு டன் அழைக்கின்றோம்.


தகவல்:குடும்பத்தினர்.கரந்தன், நீர்வேலி மேற்கு.

Posted on 11 May 2010 by Admin
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் சிவபாக்கியம் பாலசுப்பிரமணியம்
பெயர்: அமரர் சிவபாக்கியம் பாலசுப்பிரமணியம்
இடம்: நீர்வேலி
மலர்வு 16-08-1925 ---- உதிர்வு 18-04-2009

நீர்வேலி ஸ்ரீமான் அத்தியார் அருணாசலம் அவர்களின் மருமகள்
அமரர் சிவபாக்கியம் பாலசுப்பிரமணியம் (பாலாரீச்சர்)
ஆகிவிட்டது ஓராண்டு ஆறவில்லையே எம்துயரம்
உங்கள் பிரிவுத் துயரை எவ்வாறு தாங்குவது
வந்தொரு தடவை பார்க்க மாட்டீர்களா?

தகவல்: மக்கள்,மருமக்கள், பேரப்பிள்ளைகள் நீர்வேலி.

Posted on 07 May 2010 by Admin
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் கிருஷ்ணபிள்ளை நித்தியானந்தன்


அமரர் கிருஷ்ணபிள்ளை நித்தியானந்தன்
இடம்: நீர்வேலிபிறப்பு 01*11*1958 இறப்பு 14*05*2009

அமரர் கிருஷ்ணபிள்ளை நித்தியானந்தன்
திதி: பஞ்சமி
எங்களை இடைநடுவில் தவிக்கவிட்டுச் சென்று
ஆண்டொன்று ஆனதுவோ அப்பா!
உங்கள் பிரிவுத் துயர் தந்த ஆறாத காயங்கள்
என்றென்றும் எம்மனதில் ஓயாத அலைகளாய்
பாய்ந்த வண்ணம் உள்ளது அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
மனைவி, பிள்ளைகள்.
நீர்வேலி வடக்கு, நீர்வேலி.Posted on 05 May 2010 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 Next >>

Content Management Powered by CuteNews