அமரர் சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை
இளைப்பாறிய இ.போ.ச. சிரேஸ்ட சாலை பரிசோதகர் - பருத்தித்துறை, மன்னார், யாழ்ப்பாணம், நீர்வேலி தெற்கு ஸ்ரீசுப்பிரமணிய சனசமூகத்தலைவர்
வயது 76
யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna, Sri Lanka (பிறந்த இடம்)
பிறப்பு 17 JUN 1944 *** இறப்பு 02 APR 2021
யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஐந்து ஆகிவிட்டது அப்பா! நீங்கள் எங்களை நிரந்தரமாய் பிரிந்து சென்று உங்கள் நினைவுகள் எங்கள் கண்முன்னே நிழலாடுகிறது!!!
வீசும் காற்றினிலும் நாம் விடும் மூச்சினிலும் எட்டு திக்குகளிலும் உம் நினைவால் வாடுகிறோம் ஐயா!
வானத்தை விட்டு நிலவையும் வாசத்தை விட்டு மலரையும் பிரிக்க முடியாது- அதுபோல உங்கள் நினைவுகளை- எங்கள் நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
உம் இழப்பால் எம் விழியோரம் கசியும் கண்ணீர் துளிகளை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்