1ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் விஜயலட்சுமி சின்னத்தம்பி (பவளம்)

அமரர் விஜயலட்சுமி சின்னத்தம்பி (பவளம்)
வயது 79
நீராவியடி, Sri Lanka (பிறந்த இடம்), நீர்வேலி, Sri Lanka, Torcy, France
தோற்றம் 21 AUG 1945***மறைவு 05 JAN 2025


திதி: 26-12-2025

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, பிரான்ஸ் Torcy ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயலட்சுமி சின்னத்தம்பி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புக்கு வரைவிலக்கணம் எது ஆழ்ந்தபோது கண்முன்னே அம்மாவின் பாசநினைவுகள் தான்!

தாங்கிப் பிடிக்கின்றன மனதை! எண்ணங்களும் செயல்களும் நீங்களாக கண்களை மூடி காட்சிப்படுத்தி கனவுகளில் காணுகிறேன்

இனிய தாயாக இல்லறத்தில் வாழ்ந்தீர்கள் அம்மா! ஆயிரம் நிலவுகள் வாழ்வில் வந்து மறைந்தாலும் ஒற்றைச் சூரியனாய் பிரகாசித்தீர்கள் அம்மா!

ஆண்டு ஒன்று சென்றாலும் ஆறவில்லை மனது ஆண்டுகள் பல சென்றாலும் ஆறாது ஆறாது நினைவுகள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!    

அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் 26-12-2025 வெள்ளிக்கிழமை அன்று பகல் 12.00 மணியளவில் France GANESHA MANDAPAM (90, Rue Emile Zola, 93120 LA COURNEUVE) (Tram : 1- Arret : Hotel de Ville / Bus : 249 Arret : Hotel de Ville) RER B LA COURNEUVE - AUBERVILLIERS - Sortie : Avenue Victor Hugo நடைபெறவிருப்பதால் அத்தருணம் தாங்கள் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர் 


தொடர்புகளுக்கு 


சங்கர் - மகன் 
Mobile : +33762945628 
Phone : +33174126857

Posted on 22 Dec 2025 by Neervely Admin1
Content Management Powered by CuteNews