மரண அறிவித்தல்: திருமதி பரமேஸ்வரி விநாயகமூர்த்தி


இறப்பு: 2013-01-29
பிறந்த இடம்: மயிலிட்டி ******* வாழ்ந்த இடம்:நீர்வேலி


மயிலிட்டி வடக்கை நிரந்தர வதிவிடமாகவும், நீர்வேலி வடக்கை தற்காலிக வதிவிட மாகவும் கொண்ட பரமேஸ்வரி விநாயகமூர்த்தி நேற்று (29.01.2013) செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம்மா தம்பதியரின் அன்பு மகளும், இளங்குமரனின் (ஜேர்மனி) அன்புத் தாயும், சுதர்சினியின் மாமியும், கஜானன், தனுசன், தருன் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (30.01.2013) புதன்கிழமை பி.ப 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் நீர்வேலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : இளங்குமரன் (மகன்)

தொடர்புகளுக்கு
இளங்குமரன் (மகன்) - நீர்வேலி வடக்கு, நீர்வேலி.

Posted on 01 Feb 2013 by Admin